விவசாயத் திணைக்களமும் கிராமிய அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் செயற்றிட்டம்

யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டம் பற்றிய கலந்துரையாடல்  திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் 03.06.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் திரு.சி.சிவகுமார், மாகாண விவசாயப் பணிப்பாளர், வடமாகாணம் திரு.ரா.சசீலன், மாகாணப் பணிப்பாளர், கிராம அபிவிருத்தித் திணைக்களம், திரு.என்.பஞ்சலிங்கம், யாழ் மவாட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பாட விதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்;; கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் நாட்டடின் தற்கால சூழ் நிலையை கருத்தில் கொண்டு எமக்கு தேவையான உணவை நாமே உற்பத்தி செய்து உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் குறைந்தது 40,000 பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் செயற்றிட்டத்தில் விவசாய திணைக்கள உத்தியோக்தர்களும், கிராம அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் விழிப்புணர்வு செயற்பாடுகள், பயிற்சிகள் மற்றும் நடமாடும் சேவைகள் முலம் வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான விதைகள், மரக்கறி நாற்றுக்கள், மரக்கன்றுகள் விற்பனை செய்தல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இச் செயற்றிட்டம் யாழ் மாவட்டம் தவிர்ந்த வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நிகழ்ச்சி திட்டம் தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு தங்களது பிரதேச விவசாயப் போதனாசிரியரை அல்லது கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரை அணுகவும்.