பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக சமுதாய மருத்துவ துறையினரின் பங்களிப்புடன் கலாசாரத்தின் ஊடாக வாழ்வியலை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளுடன் கருத்தமர்வு 29.11.2021 ஆம் திகதி மு.ப 11.00 மணிக்கு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலுக்கு அமைச்சின் செயலாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் சமுதாய மருத்துவ துறையினர் பங்குபற்றியிருந்தனர்.
யாழ் பல்கலைக்கழக சமுதாய மருத்துவபீடத்தினர் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேசங்கள் தோறும் கலாசாரத்தின் ஊடாக வாழ்வியலை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளுடன் கடமையாற்றுவதற்கான ஒரு அறிமுகக் கருத்தமர்வாக இது ஆரம்பிக்கப்பட்டது.