வவுனியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் – ஆளுநர் சந்திப்பு


வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 19 யூன் 2019 அன்று பிற்பகல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள நகர மற்றும் பிரதேச சபைகளின் தற்போதைய நிலைமைகள் , அவற்றினூடாக முன்னெடுத்துள்ள மக்கள் நல செயற்பாடுகள் மற்றும் அவற்றை மேற்கொள்ளும் போது முகம்கொடுக்கும் சவால்கள் , பிரச்சனைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் , உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் , மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், உதவி உள்ளுராட்சி ஆணையாளர், வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் , உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு