வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கனகராயன்குளம் கரப்புக்குத்தி வீதிப்பாலமானது வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா வடக்கு பிரதேசசiபின் தவிசாளர் ச.தணிகாசலம் அவர்களால் 18 செப்ரெம்பர் 2019 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.