வழிபாட்டு தலங்களில் சேவை புரிபவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

வட மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலின் கீழ் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழான பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இணைந்து வழிபாட்டுத் தலங்களில் சேவைபுரிபவர்களுக்கான இலசவ மருத்துவ முகாமினை 21 நவம்பர் 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் சிறப்பாக நடாத்தினார்கள். இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதோடு மருத்துவ சிகிச்சையினையும் பெற்று பயனடைந்தனர்.