வயல் நிலங்களில் மறுவயல் பயிர்ச்செய்கை

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாதோட்டம் விவசாய போதனாசிரியர் பிரிவில் உயிர்த்தராசன்குளம் கிராமத்தில் சிறுபோகம் 2020 இல் விவசாயத்திணைக்களத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கியா விசேட வேலைத்திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள மறு வயல் பயிர்ச்செய்கையினை 27.07.2020  அன்று வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் மற்றும் மாகாண விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக பார்வையிட்டிருந்தனர்.

இந்த சிறுபோகத்தில் குறித்த பிரதேசத்தில் வயல் நிலங்களில் முதல் தடவையாக அதிகளவான விஸ்தீரணத்தில் மறு வயல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வயல் காணியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் 50 விவசாயிகளினால் பயறு, உழுந்து, நிலக்கடலை, எள்ளு மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளன.