வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு நெடுங்கேணி, கனகராயன்குளம், பம்பைமடு, உளுக்குளம் மற்றும் செட்டிக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டமொன்று கடந்த 07.10.2019, 08.10.2019 மற்றும் 10.10.2019 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டன. இதன்போது நதிப்படுக்கைகளை அண்மித்த பகுதிகளிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் ஏறத்தாழ 2000 மரங்கள் நாட்டப்பட்டன. இம் மரநடுகை நிகழ்வில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர் .