வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழாவானது திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் 30 டிசெம்பர் 2019 அன்று மாலை மூன்ற மணிக்கு யாழ் சென் பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் அருட்தந்தை ஜெறோம் செல்வநாயகம் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகவும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திர.ஜோன் குயின்ரஸ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள். கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ உதவிப் பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வறிய பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பையும் வழங்கப்பட்டது.

How to Win at Live Poker