வட மாகாண சர்வதேச கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தக மன்றமும் நிகழ்வு

வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலில் தொழிற்துறைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான வெளிநாட்டு சந்தைவாய்ப்பு  தொடர்புகளை ஏற்படுத்தும் முகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சி கடந்த 31.10.2019 காலை 9.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது வட மாகண ஆளுநரின் செயலாளர் திரு.S. சத்தியசீலன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான  மலேசியாவின் உயர்ஸ்தானிகர் Mr. Tan Yang Thai மலேசிய இலங்கை வர்த்தக சபைத் தலைவர் Dato. S.குலசேகரன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர்  ஆர். வரதீஸ்வரன் தொழிற்துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு க.ஸ்ரீமோகனன் மாநகர முதல்வர் வளவாளர்களாக கலாநிதி அகிலன் கதிர்காமர்  மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு பி.சிவதீபன் மற்றும்  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் வட மாகணத்தைச் சேர்ந்த 79 தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மலேசிய முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

மதியம் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் வியாபார மன்றம் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மலேசிய குழுவினருடன் வட மாகணத்தைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் நேரடியாக கலந்துரையாடியதுடன் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  அவர்கள் டிஜிற்றல் தொடர்பாடல் ஊடாக விருந்தினர்களுடன் கலந்துரையாடினர்.  இந்நிகழ்வுகளுக்கான சகல ஒழுங்கமைப்பு வேலைகளும் மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.