வட மாகாண ஆளுநர் தலைமையில் 21 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு

வடமாகாணத்தில் சுகாதார சேவையை விஸ்தரிப்பதன் மூலம் மக்கள் நலன்களை மேம்படுத்தும்  நோக்கோடு  சுகாதார அமைச்சினால் 21 அம்புலன்ஸ் வண்டிகள் வடமாகாண சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் 13 பெப்பிரவரி 2019 அன்று  இடம்பெற்றது.

குறித்த 21 அம்புலன்ஸ் வண்டிகளும் யாழ்ப்பாணம் (9), கிளிநொச்சி (4) , வவுனியா (2) , முல்லைத்தீவு (2) மற்றும் மன்னார் (4) ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ,மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.