வட மாகாணத்திற்கு புதிதாக 80 அதிபர்கள் நியமனம்

வட மாகாண பாடசாலைகளுக்கு புதிய 80 அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவமும் இன்று 10 பெப்பிரவரி 2020 யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கினார்.
வடமாகாணத்தின் கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வடமாகாணத்தின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார்,வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு, கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

 

Please follow and like us:
0