வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் யாழ் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்படவேண்டுமென்று கேட்டுக்கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள், அதை நோக்காக கொண்டுமுன்வைக்கப்படும் திட்டங்களுக்கு பிரதேச சபைகளின் ஊடாக உதவி புரிவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பிரதேச சபைகளின் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு