வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் 29 மார்ச் 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. வடமாகாணத்தில் காணப்படும் பௌத்த விகாரைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட பிரச்சனைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதுடன் வடமாகாணத்தில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் , கைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன , வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , வடகிழக்கு பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட கௌரவ தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வெவ விமலசார தேரர் அவர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பௌத்த மதகுருமார்கள் மற்றும் ஏனைய மத தலைவர்கள் ,முப்படையினர் கலந்துகொண்டனர்.