வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் (14.08.2023 – 20.08.2023)

மாகாண டெங்கு கட்டுப்பாட்டு குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் ‘டெங்கினைக் கட்டுப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமானது அனுஷ;டிக்கப்பட்டது. அந்த வகையில் 14.08.2023 தொடக்கம் 20.08.2023 வரை வடக்கு மாகாண சபை வளாகத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

முதற்கட்டமாக 14.08.2023 அன்று டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி வடக்கு மாகாணசபை வளாகத்தில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து டெங்கு பெருகும் அபாய இடங்களை குழுவாக கள ஆய்வு செய்து கண்டறிந்தார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிரமதானத்தின் முன்னர்                                                                              சிரமதானத்தின் பின்னர்

                                                                             

                                                         

15.08.2023 அன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் டெங்கு எதனால் ஏற்படுகின்றது? டெங்கு பெருகும் இடங்கள்? டெங்கினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்? என்ற வகையில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய காணொளிகள் திரையிடப்பட்டது.

                     

16.08.2023 அன்று டெங்கு அதிகமாக பெருகுமென அடையாளம் காணப்பட்ட இடங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வடக்குமாகாண சபை வளாகத்தின் உட்புற பகுதிகளில் சிரமதானம் இடம்பெற்றது. இச்சிரமதானத்தில் பிரதம செயலாளர் செயலகம் மற்றும் ஏனைய அமைச்சுக்கள், திணைக்களஙகளின் அலுவலக சுற்றுச்சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன் இப்பணியில் அனைத்து அலுவலர்களும் பங்குபற்றியிருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

17.08.2023 அன்று பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான விழிப்புணர்வு நிகழ்வானது சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகரால் நிகழ்த்தப்பட்டது. இதில் டெங்கு நுளம்பு அதிகரிக்கும் இடங்களை இனங்கண்டு இல்லாதொழிக்க வேண்டுமெனவும் ஆபத்தான டெங்கு அறிகுறிகள் வருவதற்கு முன்னரே இரண்டு நாட்கள் தொடர்ச்சியான காய்ச்சல்; இருப்பின் குருதிப்பரிசோதனை செய்து டெங்கு நோயிலிருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

                                                     

18.08.2023 அன்று வடமாகாண சபை வளாகத்தின் சுற்றுப்புற சிரமதான நடவடிக்கையிலும் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆம் திகதிகளில் கள தரிசிப்புக்கள் மதிப்பீடுகள் சீரான வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியான சுத்தப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இவ்வாறாக டெங்கு கட்டுப்பாட்டு வாரமானது வடக்கு மாகாண பிரதம செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி அமைச்சின் செயலக உத்தியோகத்தர்கள், பேரவைச்செயலக உத்தியோகத்தர்கள், பிரதிப்பிரதம செயலக உத்தியோகத்தர்கள், ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து, இறைவரி, உள்ளக கணக்காய்வாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரதும் பங்குபற்றலுடன் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது.