வடமாகாண நாடக கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறை – 2021

வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடகக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்கலை மூலமாக 15.10.2021தொடக்கம் 20.10.2021 வரை நடைபெற்றது. மேற்படி பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட கலைஞர்களின் வேண்டுகோளிற்கமைய கலாநிதி க.ரதிதரன், தலைவர் நுண்கலைத்துறை , சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் மற்றும் திருவாளர்.தி.தர்மலிங்கம் விரிவுரையாளர் நடனமும் நாடகத் துறை , விபுலானந்தா அழகியற்கற்கைகள் பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம் ஆகிய வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ரீதியாக பயிற்சிப்பட்டறை 20.11.2021 தொடக்கம் 19.12.2021 வரை நடாத்தப்பட்டுவருகின்றது.
இதுவரை யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இப்பயிற்சிப்பட்டறை நடைபெற்றுள்ளது.