வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் புடவைக் கைத்தொழில் திணைக்களம் இணைந்து யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்தும், ‘வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025’ இனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (11.04.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தக் கண்காட்சி நேற்று ஆரம்பமானது என்பதுடன் நாளை சனிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.