வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் ‘தொழில் யோசனையினை உருவாக்குதல்’ பயிற்சிநெறி நடாத்தப்பட்டது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் லீட் செயற்திட்டத்தின்(ILO LEED + Project) கீழ் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 20 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 01 செப்ரெம்பர் 2023 தொடக்கம் 03 செப்ரெம்பர் 2023 வரை 3 நாட்கள் சாவகச்சேரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமையாற்றினர்.

 Slot Machine Guide (What is a Slot Machine?) 

இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு தொழில் யோசனைகளை கண்டறிந்து அவற்றில் இருந்து மிகப்பொருத்தமான ஒரு தொழில் யோசனையை பயிற்சியின் நிறைவின் போது தெரிவு செய்து அத்தொழிலினை ஆரம்பிப்பதற்கான ஆலோசனையுடன் இப் பயிற்சி நெறியானது நிறைவு பெற்றது.