வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபத்தில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் 13 மார்ச் 2020 முதல் 20 ஏப்ரல் 2020 வரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறைவழங்கப்படுவதாக கல்விஅமைச்சு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார். இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடை முறை படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Please follow and like us:
0