வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார்.

Sites That Offer Real Money Poker for US Players in 2023

வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை  தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார்.

ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2 சதவீதமாக காணப்படும் அதேவேளை ஏனைய மாகாணங்களின் தேசிய பாடசாலைகள் 3.5 சதவீதமாக  காணப்படுவதனால் வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகளையும் சராசரியாக 3.5 சதவீதமாக கொண்டுவரும் நோக்கில் 14 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு கௌரவ ஆளுநர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் குறித்த 14 பாடசாலைகளும் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் கட்டாயம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டுமென்றும் அவற்றை தெரிவு செய்து அனுப்பும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளதெனவும் அவர்கள் கூடியவிரைவில் பாடசாலைகளை தெரிவுசெய்து கௌரவ ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.