வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு தங்கப்பதக்கம்

பாராளுமன்ற அரச கணக்கு குழுவினால் 2017 ஆம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட அரச அலுவலகங்கள், நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களால் கடந்த 5ஆம் திகதி தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நானாட்டான் பிரதேச சபை வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டது.

இந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை ஊக்குவிக்கும் விதமாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 10 யூலை 2019 அன்று கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்களுக்கு தனது ஊக்குவிப்பு மற்றும் வாழ்த்துச் செய்தியினை வழங்கினார். மேலும், 2017 ஆம் ஆண்டில் வடமாகாண ஆளுநராக செயற்பட்ட கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்களையும் வட மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்டோரையும் ஆளுநர் அவர்கள் இதன்போது பாராட்டினார்.

Best Online Casinos in the USA for 2023 🏆✔️ Legit US Casino Sites

No Deposit Bonus Casinos in the USA for 2023 [Free Real Money]