வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 நிகழ்வு சர்வதேச மண் தினமான 05.12.2023 செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியிலுள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற மண்தின நிகழ்வின்போது விவசாய அமைச்சினால் அறுவடை சஞ்சிகை வெளியிடப்பட்டதோடு சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
சிறப்பு நிகழ்வாக விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோாகத்தர்கள் இணைந்து வழங்கிய “மண் தேவி” விழிப்புணர்வு நாடகம் மேடையேற்றப்பட்டது.
மண்தின நிகழ்வில் விருந்தினர்களாக, வடக்கு மாகாண பிரதம செயலாளர் உயர்திரு.சமன்பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு. அ.சிவபாலசுந்தன், யாழ்பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் சீ.வசந்தரூபா, உள்ளூராட்சி ஆணையாளர் திரு.எஸ்.பிரணவநாதன், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் கலாநிதி இ.அன்ரனிராஜன் உள்ளிட்டோரும், விவசாய அமைச்சு மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள், சனசமூக நிலையப் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த மண்தின நிகழ்வுகளை வடக்கு மாகாண விவசாய அமைச்சுடன் இணைந்து வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் பிரதேச சபைகள் இணைந்து ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.