வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2024

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வானது 28.06.2024 ஆம் திகதியன்று கோண்டாவில் மாநகர குடிநீர் விநியோக திட்ட வளாகத்தினுள் வடமாகாண மகளிர் விவகாரஅமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 100 தேக்கு மரக்கன்றுகளை நாட்டிவைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின்; உதவிச் செயலாளர்கள், அமைச்சின் கணக்காளர், யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்து மரநடுகையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.