வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், பிரிவு தலைவர்கள், சாமாசங்களின் பிரதி தலைவர்கள், உள்ளிட்ட குழுவினர் 24 பெப்பிரவரி 2020 அன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பின் போது பேசப்பட்டன. வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பில் இருக்ககூடிய சிக்கல் நிலைகள் தொடர்பில் விரிவாக ஆளுநருக்கு எடுத்து கூறப்பட்டது இச்சந்திப்பின் போது கருத்துரைத்த ஆளுநர் பல ஆலோசனைகளையும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.