வடக்கு மாகாண ஆளுநர் கீரிமலை தீர்தக்கரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கீரிமலை தீர்தக்கரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் 13 பெப்பிரவரி 2020 அன்று மேற்கொண்டார்.
குறிப்பிட்ட கீரிமலை பகுதியில் தீர்த்தமாடும் பகுதியில் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே இந்த விஜயம் அமைந்திருந்தது. நேரடியாக குறித்த பகுதிக்கு சென்ற ஆளுநர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார். அப்பகுதிகளில் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகளை ஆளுநர் வழங்கினார்.