வடக்குமாகாண பொதுச்சேவைக்குட்பட்ட விவசாயப் போதனாசிரியர் தரம் III மற்றும் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III இற்கான புதிய நியமனங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழான விவசாயப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு எட்டு (8) உத்தியோகத்தர்களுக்கும்> வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழான கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு இரண்டு உத்தியோகத்தர்களுக்குமான நியமனங்கள் 15.06.2021 ஆம் திகதி வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. அ.சிவபாலசுந்தரன் வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் நியமன கடிதங்களை விதிக்கப்பட்ட கால எல்லைக்குள் பெற்றுக்கொள்ளாத மற்றும் நியமனக் கடிதங்களை பெற்றும் சேவை நிலையங்களில் அறிக்கையிடாத வெற்றிடங்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.