வடக்குமாகாண இணைந்த சேவையின் பதவியணியான தொழினுட்ப உத்தியோகத்தர் சேவை அலுவலர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்குமாகாண இணைந்த சேவையின் பதவியணியான தொழினுட்ப உத்தியோகத்தர் சேவையின் தொழினுட்ப உத்தியோகத்தர் (மின்னியல்) தரம் III இற்கான வெற்றிடங்களிற்காக தெரிவு செய்யப்பட்ட 03 விண்ணப்பதாரிகளிற்கு நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் பங்கேற்றதுடன் தொழினுட்ப உத்தியோகத்தர்களிற்கான நியமனக் கடிதங்களையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வானது 2019.05.08 ஆம் திகதி வடக்கு மாகாண சபை வளாகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.