யாழ்.மாவட்டத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

MGM Poker PA Review - Code & App Included - PokerListings

வடமாகாண ஆளுநர். கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையின் கீழ் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறை வேற்றுத்தர அதிகாரிகளுக்கு “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப் பட்டறையானது வடக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சிப் பட்டறையானது வடமாகாணத்திலுள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் நடாத்தி முடிக்கப்பட்டு 06.04.2019 ஆம் திகதி 5வது தடவையாக யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வானது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமாகியது. பின்னர் இப்பயிற்சிப் பட்டறைக்குப் பொறுப்பான இணைப்பதிகாரியாக செயற்படுகின்ற வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்) திருமதி. அ.ஸ்ரான்லி டி மெல் அவர்களினால் இப்பயிற்சிப் பட்டறையினுடைய நோக்கம்பற்றி குறிப்பிடப்பட்டதுடன் வளவாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். வளவாளர்களாக Stromme Foundation நிறுவனத்திலிருந்து ரொனி செனிவிரத்ன அவர்களும் உதயங்க வர்ககொட அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். பங்குபற்றுநர்களாக யாழ.;மாவட்டத்திலுள்ள மத்திய, மாகாண அலுவலகங்களில் கடமையாற்றும்; அறுபதுக்கும் மேற்பட்ட நிறைவேற்றுத்தர அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதான மூன்று தலைப்புக்களின் கீழ் அமர்வுகள் நான்கு பிரிவுகளாக நடாத்தப்பட்டது. முதலாவது தலைப்பு ஊழல் பற்றிய அறிமுகம், விளைவுகள் மற்றும் தடுக்கும் முறைகள் என்பதாகும். இதன் கீழ் வீடியோகாட்சிகள், குழுச் செயற்பாடுகள் மற்றும் விடய நாடகங்கள் என்பனவற்றினூடாக ஊழலின் தன்மைகள், வகைகள், ஊழல் கனவுரு, மோசடி முக்கோணி மற்றும் உலக ஊழல் குறிகாட்டிகள் என்பன கலந்துரையாடப்பட்டன.

இரண்டாவது தலைப்பு ஊழலுக்கு எதிரான கருவித்தொகுதிகள் என்பதாகும். இவ் அமர்வானது ஊழல்களினை அடையாளம் காண்பது எவ்வாறு அதனை வெளிப்படுத்துவது எவ்வாறு, இவை தொடர்பாகக் காணப்படுகின்ற சட்டங்கள் எவை, இவை தொடர்பாகக் காணப்படுகின்ற நிறுவனங்கள் எவை, இவை தொடர்பாகக் காணப்படுகின்ற நடைமுறைகள் எவை மற்றும் அவற்றினைப் பயன்படுத்துவது எவ்வாறு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஊழலுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் என்னும் மூன்றாவது தலைப்பின் கீழ் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளுக்காக சமூக வலைத்தளங்களினை எவ்வாறு பயன்படுத்துவது அதனைப் பயன்படுத்துகின்றபோது எழக்கூடிய சவால்கள் எவை என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.