யாழ் மறைமாவட்ட ஆயர் – ஆளுநர் சந்திப்பு

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று முற்பகல் (22) ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது நேற்றைய தினம் கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்த ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.