வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019 ‘ எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு