யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளகப் பூப்பந்தாட்டத்திடல் திறப்பு விழா

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் அமைக்கப்பட்ட உள்ளக பூப்பந்தாட்டத் திடல் திறப்பு விழா கடந்த 27.08.2023 ஆம் திகதி வியாழக்கிழமை வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் தலைமையில் காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும் கௌரவ விருந்தினராக கல்வி அமைச்சின் செயலாளர் திரு எம்.பற்டிக் டிறஞ்சன் அவர்களும் விருந்தினர்களாக மாகாண கட்டிடங்கள் திணைக்களப் பணிப்பாளர், மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், வடமாகாண விளையாட்டுத் திணைக்கள விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள், கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிற்பித்தார்கள்.
இந்நிகழ்வு காலை 9.00 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களின் பான்ட் வாத்தியக் குழுவினரின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் கௌரவித்து அழைத்து வரப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. திறந்துவைக்கப்பட்ட பூப்பந்தாட்டத்திடலில் பதினைந்து நிமிடம் மாணவர்களின் கண்காட்சி ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்களின் சிறப்பு உரைகளுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.