யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட மீளாய்வு கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட மீளாய்வு கலந்துரையாடல் வட மாகாண கௌரவ ஆளுநர்   பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் இன்று (22.06.2021) காலை  9.30 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டப் பொறியியலாளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், மாவட்ட பிரதம தபாலதிபர்  மற்றும் திட்டமிடல் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டத்தின்  கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், புதிய திட்டங்களுக்கான  மேலதிக நிதி ஒதுக்கீடுகள் எதுவும்  மேலும் இவ் வருடத்திற்கு அரசினால் அனுமதிக்கப்படாமையால் புதிதாக எந்த திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என அரசினால் அறிவறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் திட்டமிடப்பட்டுள்ள நீர் வழங்கல் திட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.