மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – மன்னார்

மூலிகை தோட்டம் மற்றும் மூலிகை சார் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடந்த 04/12/2022ம் திகதி மன்னார் மாவட்ட சித்த வைத்தியசாலையில் மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் ஏறத்தாழ 150 மூலிகைக் கன்றுகள் மன்னார் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டு, வைத்தியசாலை வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான கன்றுகள் நாட்டப்பட்டதுடன் ஏனைய கன்றுகள் மன்னார் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து மூலிகை சேகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண ஆணையாளர், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மாவட்ட சித்த வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.