முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஐக்கிய அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பால் புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் அன்பளிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் ஒன்றறை ஐக்கிய அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பு அன்பளிப்பாக வளங்கியுள்ளது .  இக் கையளிப்பு நிகழ்வு 21.11.2020 அன்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது. இவ் இயந்திரம் சுமார் 5.6 மில்லியன் ரூபா பெறுமதியானது.

இந் நிகழ்வில், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் அனைத்துலக மருத்துவநல அமைப்பின் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி காண்டீபன், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நிலக்சன், கதிரியக்க வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி துளசி, திடடமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி விதுரன், வடமாகாண சுகாதார அமைச்சின் திடடமிடல் உத்தியோகத்தரும் அனைத்துலக மருத்துவநல அமைப்பின் இணைப்பாளருமான திரு. கிருஷ்ணகுமார் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பங்குகொண்டனர்.