முல்லைத்தீவு கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் ஆளுநர் ஆய்வு செய்தார்

முல்லைத்தீவு  துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.
ஆலயத்தின் நான்கு திக்கு இராஐகோபுரங்களுக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், திருக்குடமுழுக்கு நன்னீராட்டுவிழாவும் இன்று இடம்பெற்றது.
Bonuses, Win Rate & Games - Indivisible Gaming
இராஐ கோபுரங்களுக்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவின் பிரதம அதிதியாக வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். ஆலய காணிப்பிப்பிரச்சனை உள்ளிட்ட சிக்கல்கள்  தொடர்பில் இதன்போது ஆலய நிர்வாகத்தினரால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப்பிரச்சனை தொடர்பில் தனக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் காணிப்பிரச்சினை வீட்டுப்பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கெளரவ ஆளுநர் இதன் போது குறிப்பிட்டார்.