மின்தறி உற்பத்தி நிலையத் திறப்பு விழா

தொழிற்துறைத் திணைக்களத்தினால் தும்பளை தெற்கு, பருத்தித்துறை எனும் முகவரியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தறி உற்பத்தி நிலைய கட்டிடமானது வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு ஆள்வார்பிள்ளை சிறி அவர்களாலும் இன்று 29.10.2020 மதியம் 12.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்; திருமதி வனஜா செல்வரட்ணம் மற்றும் கணக்காளர் திரு ப.காண்டீபன் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பருத்தித்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், நெசவாளர்கள், மற்றும் பிரதேச ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.