“மாமரங்களைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் தொடர்பான வயல்விழா”

“TOM E JC மாமரங்களின் விளைச்சலை அதிகரித்தல்” எனும் நோக்கில் “மாமரங்களைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் தொடர்பான வயல்விழா” 09.08.2019 ஆம் திகதி  அன்று அடம்பன் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள இத்திக்கண்டல் எனும் கிராமத்தில் அடம்பன் விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூறு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இவ் வயல் விழாவில் பாடவிதான உத்தியோகத்தர் (பழப்பயிர்கள்), உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என 88 பேர் வரையில் பங்குபற்றி பயனடைந்தனர்.

இவ் வயல் விழாவில் மாமரங்களைக் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான செயல் முறைப் பயிற்சி பாடவிதான உத்தியோகத்தர் பழப்பயிர் அவர்களால் செய்துகாட்டப்பட்டது. அத்துடன் மாமரங்களைக் கத்தரித்தலினால் ஏற்படுகின்ற நன்மைகள் தொடர்பாகவும் விளைச்சலை அதிகரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மாமரங்களில் காய்களுக்கு பொதியிடுவதனால் ஏற்படுகின்ற நன்மை மற்றும் தீமைகள் பற்றியும் எவ்வாறு பொதியிடப்படவேண்டும் என்ற விபரமும் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்களினால் பங்குபற்றுநர்களிற்கு கூறப்பட்டது.

21