மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான பளுதூக்கல் போட்டி கடந்த 2024.05.12 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான , பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அணி 09 தங்கம்,06 வெள்ளி மற்றும் 01 வெண்கலமப் பதக்கங்கள் பெற்று சம்பியனாகவும், கிளிநொச்சி மாவட்ட அணி 01 தங்கம், 02 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2 ம் இடத்தையும் வவுனியா மாவட்ட அணியினர் 02 வெண்கலமப் பதக்கங்கள்பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மாகாண மட்டத்தில் பெண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அணி 08 தங்கம்,07 வெள்ளி மற்றும் 03 வெண்கலப் பதக்கங்கள் பெற்று சம்பியனாகவும் வவுனியா மாவட்ட அணி 02 தங்கம்,02 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2ம் இடத்தையும் மன்னார் மாவட்ட அணி 01 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்ககங்கள் பெற்ற போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்ற போட்டியாளர்களும் எதிர்வரும் 07.6.2024 ஆம் திகதி தொடக்கம் 09.06.2024 ஆம் திகதி வரை பொலநறுவையில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.