மருத்துவ கண்காட்சி – 11 – 2019

வடமாகாண சுகாதார அமைச்சும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும் இணைந்து நடாத்திய மருத்துவக் கண்காட்சி-11 2019 இன் அங்குரார்ப்பண வைபவமானது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கிளிநொச்சி வளாகத்தில் 2019 ஏப்ரல் 02 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் கு.மிகுந்தன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இரு நாட்கள் இடம்பெற்ற இக் கண்காட்சியில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் அடிப்படை விஞ்ஞானம், மருத்துவத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், தொழில் வழிகாட்டல், சுகாதார துறையில் தற்போது காணப்படும் சவால்கள், குழந்தை, விடலை, வாலிப மற்றும் முதியோர்களின் ஆரோக்கியம் தொடர்பாக மக்களிற்கு விழிப்புணர்வூட்டும் பல்வேறு காட்சி கூடங்கள் ஆகியன அமைக்கப்பட்டிருந்தன.