மருத்துவமுகாம் சுதந்திரபுரம் – உடையார்கட்டு

விவசாய திணைக்களத்தினால் கடந்த 06.10.2022 அன்று சுதந்திரபுரம் – உடையார்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் விசுவமடு சித்த மத்திய மருந்தகமானது மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்தியது.

முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்களினால் நடாத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் ஏறத்தாழ 100 விவசாயிகள் பயன்பெற்றனர்.