மன்னார் மாவட்டத்தில பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 08.02.2024 அன்று மன்னார் மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் கு.காஞ்சனா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

steps on how to start an online casino in 2023

இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர், மன்னார் நகர பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், மன்னார் மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.