கௌரவ ஆளுநரின் நெறிப்டுத்தலில் மத வழிபாட்டுத் தலங்களில் ஈடுபடுவோருக்கான இலவச மருத்துவ முகாம் வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணப் பிரதேச செயலகர் பிரிவில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
பிரதம செயலாளர் எஸ்.எம்.பந்துலசேன, கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம், வடமாகாண வருவாய் திணைக்கள ஆணையாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வைத்தியர்கள் வைத்தியர் நிக்சன், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றது சிறப்பம்சமாகும்.