மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர்

மனிதன் இப்பொழுது விண்தொட்டிருக்கின்றான் ஆனால் மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை என்று வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமான விவசாயக்கண்காட்சி 2019 இல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார் .

‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வளாகத்தில் ஆளுநர் தலைமையில் இன்று ஆரம்பமான விவசாய கண்காட்சி நிகழ்வில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில்,

விவசாயிகள் சேற்றிலே இறங்கினால் தான் நமக்கு சோறு உண்டு, நீர் உண்டு . விவசாயிகள் வேர்வை சிந்தாவிடின் எமக்கு ஆகாரமில்லை. எமது விவசாயிகளுக்கு நீர்ப்பிரச்சனை மானியப்பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் உண்டு. அதனை குறித்து நாம் தீவிரமாக ஆராய்தல்வேண்டும். அரசியல் சுதந்திரம் பொருளாதார சுதந்திரம் எனும் அடிப்படையில் நம் உணவும் சுதந்திரமாக இருக்கவேண்டும். உணவு சுதந்திரமாக இருக்கும் சமுதாயத்தினால் ஏனைய விடயங்கள் தொடர்பில் யோசிக்கும் சக்தியும் புத்தியும் ஏற்படும் என்று ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தின் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு இதன்போது ஆளுநரினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விவசாய கண்காட்சி எதிர்வரும் 20ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

 

MGM Poker App Review - Bonuses, Promos, Etc.