மாகாண விவசாயத்தினணக்களத்தின் ஏற்பாட்டில் 23.02.2021 செவ்வாய் கிழமை மஞ்சள், இஞ்சி பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு யாழ்ப்பாண மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி வகுப்பிற்கு மாத்தளை மாவட்ட ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் விரிவாக்க உத்தியோகத்தர் திரு.எம்.ஏ.எம்.இல்மி வளவாளராக கலந்துகொண்டார். இப் பயிற்சி வகுப்பில் மஞ்சள், இஞ்சி பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் யாழ்ப்பாண பிரதி மாகாண விவசாய பணிமனையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சியானது மேற்குறிப்பிடபட்ட வளவாளரினால் 24-02-2021 அன்று முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த் மஞ்சள், இஞ்சி பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் 25-02-2021 வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில வவுனியா, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த மஞ்சள்இ இஞ்சி பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் நடைபெறவுள்ளது.