போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் போதையற்ற தேசமாக நாட்டினை ஆக்கவேண்டுமென்ற தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்திற்கு வடமாகாணத்தின் பங்களிப்பை வழங்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு கிளிநொச்சியில்25 யூன் 2019 அன்று நடைபெற்றது.

அத்துடன் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் போதைக்கு எதிரான கொடிகளையும் பதாதைகளையும்தாங்கிய வாகனங்களின் பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

 

 

-NP Governor Media