பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா

ஓமந்தையிலுள்ள காயாங்குளம் எனும் இடத்தில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா 01.10.2019 ஆம் திகதியன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சிறிய வெங்காயச் செய்கை பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டாலும், பெரிய வெங்காயச் செய்கையானது ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தளவிலான விஷ்தீரணத்திலேயே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

எனவே பெரிய வெங்காயச் செய்கைத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தன் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பெரியவெங்காயவிதை வழங்கப்பட்டு, விவசாயப் போதனாசிரியர்களின் ஆலோசனைகளின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது 4 ½ மாதங்கள் கடந்த நிலையில் பெரிய வெங்காயமானது தனது அறுவடைக் காலத்தை அண்மித்தநிலையில் இவ் வயல் விழா ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. பெரிய வெங்காயமானது ஆரம்பத்தில் 45 நாட்கள் நாற்றுமேடையில் பராமரிக்கப்பட்டு பின்னர் வயலில் நடுகைசெய்யப்பட்டு 3 மாதங்கள் கடந்த நி;லையில் அறுவடை செய்யப்படுகிறது.