பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான உபகரண உதவி வழங்கும் நிகழ்வானது வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 13.10.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகம், வவுனியாவில் நடைபெற்றது.