புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக, யாழ் மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்யும் முகமாக தொழிற்துறைத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுடனான விற்பனை சந்தையானது யாழ்ப்பாணம் புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் 28.11.2022ஆம் திகதி நடைபெற்றது.

மேற்படி விற்பனை சந்தையானது, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவர்களிடையே சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துவதை பிரதானமான நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. இவ் விற்பனைச்சந்தை காலை 8.30 மணி ஆரம்பமாகி பிற்பகல் 5.45 மணி வரை நடைபெற்றது. இதில் 06 தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றி தமது வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டார்கள். இவ் நிகழ்வின் மொத்த விற்பனைப்புரழ்வு ரூபா 41,300.00 ஆகக் காணப்பட்டதுடன் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாகவும் இருந்தமை சிறப்பம்சமாகும்.