பிரதமர் இல்லத்தில் மாகாண சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

  2023 ஆம் ஆண்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று 26.09.2023 அன்று கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றது.
கௌரவ மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வருவாய் வசூலிப்பது, சூரிய சக்தியை பயன்படுத்தி மின் கட்டணத்தை குறைப்பது, நீதிமன்ற அபராதம் மற்றும் முத்திரை வருவாயை உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளுக்கு பயன்படுத்துவது, மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பணி வெற்றிடங்களை நிரப்புதல், பல்நோக்கு பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
வடமாகாணத்தின் சார்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேனவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.