பினாக்காய் குள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டத்தின் கிராமிய குளங்கள்,  அணைக்கட்டுக்களை அபிவிருத்தி செய்தலின் கீழ் பினாக்காய் குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் 19 ஏப்பிரல் 2021 காலை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பினாக்காய் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். மேலும் பிரதமசெயலாளர், வடமாகண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், விவசாய துறைசார் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
இச் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக திட்டத்தின் பெயர் பலகையை வடமாகண ஆளுநர் அவர்கள் திரை நீக்கம் செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.