பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு கோவில்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் அந்நிய ஆக்கிரமிப்புக் களையான பாத்தீனியம் தொடர்பாக விழிப்புணர்வுப் பேரணி ஒன்று 12.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. பாத்தீனியமானது பயிர் மற்றும் மேய்ச்சல் களையாக விளங்குவதுடன் மனிதர்களிலும், கால்நடைகளிலும் ஒவ்வாமைகளையும், சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தவல்லது.

களைகொல்லிகளைத் தாங்கிவளரும் இந் நச்சுக் களைகளானது பயிர் உற்பத்தியில் பாரியபின்னடைவை ஏற்படுத்துவதுடன் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. இந் நிலையில் இந் நச்சுக் களை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், அவற்றை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளைத் தூண்டும் பொருட்டும் இப் பேரணி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.